Skip to main content

பெண் எனும் சக உயிர்!

பெண் எனும் சக உயிர்!-----------------------
மூடரே!
முழங்குவதேன்?!
சிந்திக்கத்தானே மூளை!
நிந்தித்தே நித்தம் அலைவதேன்?!

உன்னுள்ளே சரிபாதி அண்டம்தான் 'அவள்'!
உறைப்பது எப்போது?!
பெண்ணுள்ளே கிடந்த பிண்டம்தான் 'நீ'!
உறைப்பது எப்போது?!
மண்ணுள்ளே மக்கும் பண்டம்தான் 'நாம்'!
உறைப்பது எப்போது?!

மனிதம் கொண்டவன்தான் மனிதன்!
அந்தச் சொல்லின்
புனிதம் விண்டவனை என்ன சொல்லி அழைக்க?!

ஓ! பெண்ணே!
மறுசனனம் ஒன்றெடுத்து - ஆண்
மகவு உருவெடுத்து - இம்
மண்ணில் பாதம் பதி!
அன்று உனக்கு
இவ்வுலகில் இடம் இருக்கும்!
இல்லையேல்-
உன் அன்னையின்
மார்பு காம்பை நீ கவ்வும்முன்
இம்மண் உன்னைக் கவ்வும்!
பால்மணம்-
உன் நாசியை நிறைக்கும்முன்
பாழும் உலகம்
உன் நாடியை நெரிக்கும்!!
-அ.ச.கி.
https://m.youtube.com/watch?v=6OcPS5ouM0M

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!