நான் உணர்ந்தவை, உண்மை என்று நம்புபவை! [10] (சிறு சொல்லாய்வு!)

சிறு சொல்லாய்வு!

     பின்வரும் சொற்களின் வேர்ச்சொல்லான வினைச்சொல் '-ற்று' என்றே முடிகிறது. அதாவது ஆற்று, தேற்று, ஏற்று, மாற்று என்பன வேர்ச் சொற்கள். அதன்மூலம் எழும் சொற்கள் :-
ஆறுதல் - ஆற்றுதல்
தேறுதல் - தேற்றுதல்
ஏறுதல் - ஏற்றுதல்
மாறுதல் - மாற்றுதல்

     இச்சொற்களில் முதலில் வருவன, அதாவது, ஆறுதல், தேறுதல், ஏறுதல், மாறுதல் என்பன 'தன்னிலை' (First person) தன்மீதே ஆற்றும் தொழிலை குறிக்கும் சொற்கள். அதைத்தொடர்ந்து வருவன 'தன்னிலை' பிறர் மீது ஆற்றும் தொழிலை குறிப்பது. பின்வரும் தொடர்களை காண்க:-
நான் மரம் 'ஏறுகிறேன்'
அதை மேலே 'ஏற்றுகிறேன்'

     மேற்சொன்ன சொற்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமையை கவனியுங்கள். அனைத்து சொற்களின் முதலெழுத்து நெடிலாகவே அமைந்து இருக்கிறது. முதலெழுத்து குறிலாக அமையும் வார்த்தைகள் இந்த இரட்டை முறையில் வருவது இல்லை.
.கா:- சுற்றுதல், கற்றல், விற்றல்
     ஆக, முதலெழுத்து நெடிலாக அமையும் சொற்களே இத்தகைய இரட்டை முறையில் இயங்குகின்றன.


     'போற்றுதல்' இதில் சேராத சொல்லாக உள்ளது. இந்த சொல்லுக்கு மேல் சொன்ன அனைத்தும் பொருந்தும். '-ற்று' ஈறாக வருகிறது. முதலெழுத்து நெடிலாக அமைகிறது. ஆனாலும் இதற்கு இணையான, தன்னிலை தன் மீதே ஆற்றும் செயலை குறிக்கும் சொல் வழக்கத்தில் இல்லை.
      அதாவது "போற்றுதல்" பிறர் மீது ஆற்றப்படும் காரியமாகவே இருக்கிறது. தன்னைத் தானே போற்றுவது கிடையாது, கூடாது என்றே 'தமிழ்' வகுத்திருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது!
                                            
எனக்கு தோன்றியதை எழுதியிருக்கிறேன். ஆகையால் பிழையிருக்கலாம். பிழையிருப்பின் மன்னிக்கவும்! பிழையையும் என்னையும் திருத்தவும்!

-..கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!