என்ன செய்வாய் நீ?!!
என்ன செய்வாய் நீ?!!
எதிரில் நீ அமர்ந்திருக்கிறாய்!
எட்டிவிடும் தூரம்!
கைகள் கட்டிவிடும் தூரம்!!
கண்கள் தேடுகின்றன!
விரல்கள் நீள்கின்றன!!
என் உடலால் உன் உடல் பூசுகிறேன்!!
சுடும் மூச்சுக்காற்று
சுகமாய் தீண்ட!
உரசிடும் தூரத்தில் உதடுகள்!!
முட்டி விடு!
முத்தம் பதி! - உதட்டு
யுத்தம் செய்!!
என்று உன் உதடு துடிக்கின்றது!!
சட்டென்று
தீண்டாமல் நகர்ந்தால்
என்ன செய்வாய் நீ?!!
-அ.ச.கி.
-அ.ச.கி.
Comments
Post a Comment