அப்பாவுக்கு!!
அப்பாவுக்கு!!
நண்ப!
பிறப்பெடுத்த பின்
கண்விழித்து - நான்
கண்ட முதற்கணத்தின் பதிவில்
நீ இருந்தாயே இல்லையோ!!
பிறப்பெடுத்த பின்
கண்விழித்து - நான்
கண்ட முதற்கணத்தின் பதிவில்
நீ இருந்தாயே இல்லையோ!!
என்
பொக்கை வாய்ச்சிரிப்பை
பொக்கிஷமாய் - உன் நெஞ்சில்
பொதித்தாயோ இல்லையோ!!
பொக்கை வாய்ச்சிரிப்பை
பொக்கிஷமாய் - உன் நெஞ்சில்
பொதித்தாயோ இல்லையோ!!
உன்
உதட்டு ஈரம் - என் கன்னத்தை
உரசியதோ இல்லையோ!!
உதட்டு ஈரம் - என் கன்னத்தை
உரசியதோ இல்லையோ!!
நான்
கதறி அழுதநேரம்
அள்ளி அணைத்து - என்
கண்ணீரை - உன்
நெஞ்சில் தேக்கினாயோ இல்லையோ!!
கதறி அழுதநேரம்
அள்ளி அணைத்து - என்
கண்ணீரை - உன்
நெஞ்சில் தேக்கினாயோ இல்லையோ!!
தூரத்தில் நின்று
தூளி ஆட்டி - நான்
தூங்க - நீ உன்
தூக்கம் தொலைத்தாயோ இல்லையோ!!!
தூளி ஆட்டி - நான்
தூங்க - நீ உன்
தூக்கம் தொலைத்தாயோ இல்லையோ!!!
நான்
துயில் கொண்ட பிறகு - எனை
தூக்கி கொஞ்சி - கண்ணீர்
துளிர்த்தாயோ இல்லையோ!!
துயில் கொண்ட பிறகு - எனை
தூக்கி கொஞ்சி - கண்ணீர்
துளிர்த்தாயோ இல்லையோ!!
என் கைப்பிடித்து
காலாற நடந்து...
எனக்கு புரியா கதைகள்பேசி
சிலாகித்தாயோ இல்லையோ!!
காலாற நடந்து...
எனக்கு புரியா கதைகள்பேசி
சிலாகித்தாயோ இல்லையோ!!
நானறியேன்!
ஆனால்... - இன்று
நீ
பிறப்பெடுக்கும் இந்நாளில்
உன்னுடன் இதெல்லாம்
நான் செய்து மகிழ
எனக்கு இசைவு தெரிவி!!
நண்ப!!!
-அ.ச.கி.
ஆனால்... - இன்று
நீ
பிறப்பெடுக்கும் இந்நாளில்
உன்னுடன் இதெல்லாம்
நான் செய்து மகிழ
எனக்கு இசைவு தெரிவி!!
நண்ப!!!
-அ.ச.கி.
Comments
Post a Comment