என்று விடியும்?!
என்று
விடியும்?!
சூடால்
சுருக்கம்
கண்ட
தாய்மண்!!
பள்ளத்தில்
பாளம்
பாளமாய்
மண்சுவடு!!
பாலவனமான
பக்கத்து
ஆறுகள்!!
மனமுடைந்த
குளம்!!
நீருக்கலைந்த
குயவன்
குட(ல)மண்!!
களைத்த
நிலம்!!
இளைத்த
மரம்!!
சுவாசம்
தொலைத்த
செடிகள்!!
சுகந்தம்
மரித்த
மலர்கள்!!
ஆழடிக்குழாயிலிருந்தும்
அதிகமாய்
அனல்காற்று!!
பனி
பொசுங்கிய
அண்டார்டிகா!!
ஏக்கத்துக்கு
ஆளான
எங்க
வீட்டு
ஆடுகள்!!
எங்களை
எட்டிமிதித்து
எக்காளப்படும்
எதிர்கிரணங்கள்!!
இனி,
இங்கே
ஒட்டகத்துக்கு
மட்டுமே
கும்மாளம்!!
இப்படி
பகலவன்
பாடாய்படுத்தினாலும்
எங்களின்
ஒரே
கேள்வி-
என்று
விடியும்!!!
-அ.ச.கி.
Comments
Post a Comment