மனிதர் அல்லாதோர் சிலர்!!!
மனிதர்
அல்லாதோர்
சிலர்!!!
ஆஹா!
கொஞ்ச
கொஞ்சமாய்
புரிகிறது!!
வஞ்சித்து
வாழும்
வாழ்க்கைக்குள்
தஞ்சம்
புகுந்தோர்!!
வெள்ளைக்காக்கா
பறக்குது
எனக்கூறி
வெள்ளந்திகளை
ஏமாற்றும் -
வெள்ளைச்
சட்டைக்காரர்கள்!!
அமிலம்
வீசி
அழகு
முகம்
அழித்திடும் -
அற்பர்கள்!!
தன்
சுயநலத்திற்காக
சூன்யம்
செய்து -
சுகம்
அனுபவிப்பவர்!!
இன்னும்
மலரா
மொட்டுக்கள்
சின்ன
சிட்டுகளை
கூட
சீரழிக்கும் -
சின்ன
புத்திகாரர்கள்!!!
மேட்டுப்பகுதியை
இன்னும்
மேடாக்க,
பள்ளத்தை
சுரண்டும் -
(பண)பற்றுடையவர்கள்!!
சவத்திலும்
சர்வத்திலும்
சம்பாதிக்க
ஆசைப்படும் -
அரசியல்
ஆன்றோர்கள்!!
ஆஹா!
கொஞ்ச
கொஞ்சமாய்
புரிகிறது!!
கயமையும்
பொய்மையும்
பொல்லாங்குமே
மனிதகுணம்
என்றானுதுவோ?!!
எனினும்,
மேற்சொன்ன
மனிதகுணத்தினின்று
பிறழ்ந்து
பிறந்த
மனிதர்
அல்லாதோர்
சிலர்
இம்மண்ணில்
உளர்!!
-அ.ச.கி.
Comments
Post a Comment