முட்டாள் தினம்!!!
முட்டாள்
தினம்!!!
ஏமாற்றப்படும்
சில
தருணங்கள்!!!
விட்டு
விடுதலையாகிறோம்
கருவறை
என்னும்
சிறு
அறையை
விட்டு -
என்றெண்ணி
சிரிக்கும்
குழந்தை
சிறைபட்டது
பரந்த
உலகில்!!
தெரிந்த
கேள்விகளை
தேர்வு
வினாத்தாளில்
தேடும்
மாணவன்!!
இன்றாவது,
என்னை
கவனிப்பாளா?!
-
என்ற
நினைப்பில்
என்
கல்லூரித்
தோழன்!!
கனவில்
வடித்த
சிலை
உயிர்பெற்றார்
போல் -
ஓர்
மனைவி!!
என்றெண்ணும்
வாலிபன்!!
இறுக்க
மூடியிருக்கும்
பிறந்த
குழந்தையின்
பிஞ்சுக்
கையை
பிரித்துப்பார்க்கும்
தகப்பன்!!
தன்
துயரம்
தனயன்
அறியக்கூடாது
-
என்று
தவிக்கும்
தந்தை!!!
இப்படி
பல தருணங்களில்
ஏமாறப்
போகிறோம்
எனத்தெரிந்தே
ஏமாறுகிறோம்!!
இவை
எல்லாம்
நமக்கு
சுகம்தரும்
ஏமாற்றங்கள்!!
இதைத்
தவிர
இன்னும்
சில!!
நாளை
வீட்டுக்கே
வரும்
உதவித்தொகை
-
என
உரைக்கும்
உயரதிகாரியின்
பேச்சைகேட்டுத்
திரும்பும்
ஊன்றுகோல்
கிழவன்!!
மூன்றே
மாதத்தில்
மும்மடங்கு
பணம் -
எனக்கேட்டு
மும்மரமாய்
முதலீடு
செய்யும்
முட்டாள்
சாமானியன்!!!
"வளமான
இந்தியாவை
உண்டாகுவோம்"
- என
வரலாற்று
காலம்
தொட்டு
வஞ்சகம்
இல்லாமல்
பெய்யுரைக்கும்
அரசியல்
ஆன்றோரின்
பேச்சை
அகலவாய்
பிளந்து
கேட்கும்
அடிமட்டத்
தொண்டன்!!
இன்னும்
ஒருமுறை
இவருக்கே
வாய்ப்பளிப்போம்
-
என
மீண்டு(ம்)
தவறுக்கே
ஓட்டளிக்கும்
கடமை
தவறாத
குடிமகன்!!
தெரியாமல்தான்
கேட்கிறேன்
-
இப்படி
ஏமாறுவதில்
அப்படி
என்ன
சுகம்
கண்டீர்?!!
ஆனால்
-
ஒன்று
உறுதி!
நீவிர்
தான்
முட்டாள்தினம்
கொண்டாட
முழுத்தகுதி
படைத்தவர்!!!
-அ.ச.கி.
Comments
Post a Comment