வல்லினம்!!
வல்லினம்!!
திசையறியாது
திகைத்து
-
துக்கத்தில்
திளைத்து
-
ஏக்கம்
திரண்டு
-
நம்மை
தினந்தினம்
வாட்டுகிறது!!
இதனூடே
-
பகிரமுடியா
பல
வலிகளும்!
பச்சைக்குணம்
கொண்ட
-
பல
இச்சை
நரிகளும்!
பச்சாதாபம்
உண்டாக்கும்
துரத்தமுடியா
எலிகளும்!!
பச்சோந்தி
குணம்
கொண்ட
புல்லர்களும்!!
வீழ்த்தக்
காத்திருக்கும்
விடம்
நிறைந்த
சர்ப்பங்களும்!!
விழும்வரை
காத்திருக்கும்
ஈன
கழுகுகளும்!!
கிளறிவிடும்
கோபம்
-
கிழித்து
காற்றில்
எறியப்பட்ட
காகிதம்
போல்..
கீழே
மேலே
ஏறி
இறங்கி
படப்படக்கிறது!!
இதை
அடக்கமுயலும்
நான்
-
இரப்பதெல்லாம்
ஒன்றே!
வல்லினம்
போல்
வேண்டும்
இடத்து
மிகும்
கோபம்
வேண்டும்!!!
-அ.ச.கி.
A story to be lived than to be told!!!!!
ReplyDelete