உதிரிப்பூக்கள்!!

உதிரிப்பூக்கள்!!

தங்கை தவிக்கிறாள்​
​தாய்லாந்தில்!!

​அண்ணன் அடைக்கப்பட்டான்
அமெரிக்காவில்!!

​அக்காளுக்கு அமைந்த அத்தான்
அயல்நாட்டில்!!

பெற்றோருக்கோ - ஓர்
பெட்டி அறை!!

இன்னும் மூத்தாரோ
முதியோர் இல்லத்தில்!!

நான் மட்டும்
இங்கே தனியாய்..
பயன்படா நூலாய்!!!

உதிர்ப்பூக்கள்-
மணம் நிறைப்பதில்லை!
மனதையும் தான்!!
             -..கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!