மரண சாசனம்!

மரண சாசனம்!


என்
ஆளுமையின்
ஆழம் விளக்கியவர்கள்!!


தோழமையில்
தோய்ந்திருக்கும் காதலை விளக்கியவர்கள்!!


அழுக்கு துணிகளிலும்,
தூசி படர்ந்த அறைகளிலும்
அரண்மனை காட்டியவர்கள்!!!


ஒற்றை தட்டிலே
பாசத்தை பகிர்ந்து அளித்தவர்கள்!!!


இன்று திசை மாறிப் போகிறோம்!!


இது ஒற்றை வழிப்பாதையாகவே
தொடர்ந்திருக்கக் கூடாதா?!!


என்
பேனா முனையும்
கண்ணீர் சிந்துகிறது!!!


! இறுதிநாளே!!
என்னையும் கலங்க வைத்த
இறுமாப்போ உனக்கு?!!


! கவிஞர்களே!!
என் இறப்புக்கு
இரங்கற்பா எழுத நினைத்திருந்தால்,
இன்றே எழுதிவிடுங்கள்!!


! வரலாற்றை படைப்பவர்களே!!
இருபத்துஒன்று வரை
உயிருடன் வாழ்ந்தான் - பின்
இருந்த நாளெல்லாம்
உடலுடன் வாழ்ந்தான்
என்று எழுதுங்கள்!!!


- ..கி.




Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!