முயலாமை!
முயலாமை!
என்று விடியும் என்று
ஏங்காதே!
அதுவரை நீயும்
தூங்காதே!!
தோல்விகளைக் கண்டு
வெம்பாதே!
வீழ்ந்தால் எழமுடியாதென்பார்
நம்பாதே!!
முடியவே முடியாதென்பார்
கேளாதே!
நாளைவரை உன் லட்சியம்
தாளாதே!!
முயலாமை என்றும்
வெல்லாதே!
வென்றாலும் நீ
துள்ளாதே!!
-அ.ச.கி.
-அ.ச.கி.
Comments
Post a Comment