நான் உணர்ந்தவை, உண்மை என்று நம்புபவை! [5]
பண்பாட்டின்
பெயரால் நம் நாட்டில் நடக்கும் இறக்குமதிகள் ஏராளம். அதைச் சுற்றி பெரும்
சந்தையே அமைந்து வளம் கொழிக்கிறது. வெளிநாட்டின் பண்பாடுகள் முற்றிலும்
வெறுக்கத்தக்கவை என்றோ, வேண்டத்தகாதவை என்றோ நான் அர்த்தம் புகுத்தவில்லை!
ஆனால், அது நம் நாட்டுசூழலுக்கு "ஏற்புடையதா" என்பது விவாதத்துக்கு உட்படுத்தவேண்டியது அவசியம்!
பண்பாடு என்பது "பண்படு" என்பதின் நீட்சியே! மனதையும் உடலையும் பண்படுத்துதல்தான் பண்பாடு, சுற்றத்துடம் சுகம்காணுதலே பண்பாடு!
"ஹேராம்" படத்தில் ஒரு வசனம் வரும்,
"5000 ஆண்டுகட்கு முன்பே
நகர் அமைத்து, அதை மிகச் சிறப்பான கட்டமைப்புடன் மேலெழுப்பி,
சாக்கடைத்திட்டம் வரை ஏற்படுத்தியவர்கள் நாம்! குழந்தைக்கு
விளையாட்டுப்பொருள் செய்து கொடுத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது!"
#நான் உணர்ந்தவை, உண்மை என்று நம்புபவை!
#அ.ச.கி. #பகுத்தறி
Comments
Post a Comment