முயற்சி போர்!

முயற்சி போர்!
இனி வாழ்க்கை எல்லாம்
வெள்ளைத் தாளே!
புது மை ஊற்றி எழுதிடுவேன்!
புதுமை தேற்றி எழுந்திடுவேன்!!

நாளும் இனிமேல்
எந்தன் நாளே!
வெற்றிகள் வந்து, மாலை யிடும்!
புகழின் உச்சியும் என் காலைத் தொடும்!!

மூச்சின் இடைவெளியை
வெற்றிகள் நிறைக்கும்! - இனி
விரலைச் சொடுக்க, அலைகள் எழும்பும்!
புருவம் உயர்த்த, மலையும் ஒதுங்கும்!!

விழுவதெல்லாம் எழுந்திடவே!
நம்பிக்கைகள் கொண்டே நான் நடப்பேன்!
முயற்சி போர்கள் நான் தொடுப்பேன்!!

வெற்றியைக்
கண்ணில் காணாமல்,
'முயற்சிப்போர்' தான் சோர்வதில்லை!
முயற்சி 'போர்'தான் நிற்பதில்லை!!

வெற்றியை
எங்கும் ஒளித்திருந்தால்,
வானம் கிழித்து எறிந்திடுவேன்!
கடலை சுழித்து எரித்திடுவேன்!!

இனி வாழ்க்கை எல்லாம்
வெள்ளைத் தாளே!
புது மை ஊற்றி எழுதிடுவேன்!
புதுமை தேற்றி எழுந்திடுவேன்!!
           -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!