இரோம் சர்மிளா
இரோம் சர்மிளா
இவரை பற்றி அறியாதவர்கள், தயவுசெய்து உங்கள் "Google" ஆண்டவரை இதற்காகவும் உபயோகியுங்கள். ஏறக்குறைய 5,500 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த இரும்பு பெண்.
12 மணிநேரம் மட்டும் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, அதை 12 வருடம் சொல்லி அரசியல் செய்யும் சாக்கடைகளுக்கு மத்தியில், புனித ஆறாய் ஓடுதல் மிகக்கடினம்! அதை 16 வருடங்களாய் செய்து காட்டிய புனித ஆத்மா, இந்த இரோம் சர்மிளா. தன் மண் மணிப்பூருக்காக!
காமராசரையும், நல்லக்கண்ணுவையுமே தோற்கடித்த நாடு இது. இந்த தலைமுறைக்கு தன் சுயரூபத்தை மேலும் ஒருமுறை சர்மிளா மூலம் உணர்த்தியிருக்கிறார்கள் நம் மக்கள்!
நன்றாய் சொன்னான் கண்ணதாசன் அன்றே, 'இந்தநாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும்!'
#அ.ச.கி.
Comments
Post a Comment