சிலிர்ப்பு!

சிலிர்ப்பு!

இராட்டினச் சவாரி..
ரோசா செடியின் முதல் பூ..
அந்தப் பூவிதழில் பனித்துளி..
பனிநாளில் நெடும்பயணம்..
மழையோடு அடிக்கும் வெயில்..
எதிர்பாரா நாளில்
விடுமுறை அறிவிக்கும் மழை..
மேகத்துக்கு நிழல் விழுமாறு
பறக்கும் பறவை..
இரவின் கருப்பில்
மதிற்பூனையின் கண்கள்!..
இன்னும் அழியா
கள்ளிச்செடி கல்வெட்டுகள்..
விடியல் நேரத்தில்
ஒற்றைக் குயில் சத்தம்..
கொன்றைமரம் உதிர்த்த
மஞ்சள் மழை..
பச்சை போர்த்திய வயல்..
மருதாணி கைகள்..
முடிகோதும் விரல்கள்..

இப்படி என்னை சிலிர்ப்பூட்டும்
நிகழ்வுகளின் வரிசையில்
இன்று முதல் இணைகிறது-
உன்
மையிட்ட கண்கள்..
மையமான புன்னகை..
மயக்கும் சுருள்முடி..
கனவை நிறைக்கும் நீள் கழுத்து..
தூக்கம் மறக்கும் குளிர் பேச்சு..
கவி கொடுக்கும் உன் இதழ்..
களி கொடுக்கும் உன் குரல்..
சொர்க்கம் சொட்டும்
சொப்பன நிமிடங்கள்..
உன் அருகாமையில் கிட்டும்
உணர்ச்சியின் எல்லை..
நினைவு இழக்கும்படி அழுத்தப் பார்வை..
உயிர் தொலையும்படி ஒரு தீண்டல்.!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!