பிரிவு!

பிரிவு!
கண்ணை விட்டு நீரைப் போல்
சதையை விட்டு ரத்தம் போல்
உடலை விட்டு உயிரினைப் போல்
இன்று பிரியப் போகும் என் கல்லூரி இளைய நண்பர்களே!

வலிகளோடு வளர்வதுதான் வாழ்க்கை!
பிரிவுகளால் எழுதப்படுவதுதான் வருங்காலம்!
நட்போ, நண்பர்களோ பிரிவதில்லை. கோர்த்திருந்த கைகள் பிரிகின்றன. சேர்ந்தே ஓடிய கால்கள் தூரம் நகர்கின்றன. அருகே கேட்ட சிரிப்புச் சத்தம், சற்று விலகிப்போகிறது. எதுவும் மாறாது, மாளாது!

கல்லூரிகள் வெறும் திசைகாட்டிகளே!
எந்தத் திசை எங்குகொண்டு சேர்க்கும் என்பதை மட்டுமே அது சொல்லும். அதில் எந்தத் திசையில் பயணிப்பது என்பது உங்கள் தேர்வு! சரியானதை தேர்ந்தெடுத்து அடுத்த பயணம் துவங்குங்கள். பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.

கடந்தகாலத்தோடு கைகுலுக்கி பிரியுங்கள்!
வருங்காலம் நிச்சயம் வாரி அணைக்கும்!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!