சொர்க்க சொப்பனம்!

சொர்க்க சொப்பனம்!

உன் விழிகொண்டு
என் உலகம் காண
ஆசை கொண்டேன்!

உன் இதயம் துடிக்க
என் உயிர் வாழும்
என்று எண்ணியிருந்தேன்!

உன் மனம் சிந்தும் வண்ணங்களில்
என் வாழ்க்கை வரையப்படும்
என்று ஏக்கம் கொண்டேன்!

என் உதிரம்
உன் வயிற்றில் உயிராய் முளைக்கும்
என்று கனவு கொண்டேன்!

உன் வாழ்வின் கேள்விகளுக்கெல்லாம்
நானே விடையாய் மாறிட
மனம் கொண்டேன்!

உன் அன்பு கடலில்
நான் மட்டும் நீந்திட
ஆசை கொண்டேன்!

உன் மடியே
என் இறுதி படுக்கை
என்று இறுமாப்பு கொண்டேன்!

உன்னை நான் பிரிந்தால்,
உலகத்தை பிரிந்த சூரியன்
உதித்து என்ன பயன் என்றேன்!

சொன்ன ஆசை எல்லாம்
சொர்கத்திலேனும் நடக்குமென்ற
சொப்பனத்தில் இன்னும் நான்!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!