விரல் வழி வழியும் கவிதைகள்!

விரல் வழி வழியும் கவிதைகள்!

முன்பு
கைகோர்த்த நொடிகள் எல்லாம்
கண் முன்னே விரிகிறதே!
இன்று
உன்னை நினைக்கையில் உள்ளே
நீர்கோர்த்து கொல்கிறதே!

முன்பு
காதலின் நீளத்தை எல்லாம்
காத்திருப்பு அளந்திடுமே!
இன்று
காத்திருப்பின் இனிமையை சொல்ல
காதலிடம் தெளிவில்லையே!

முன்பு
இரண்டே மணிநேரம் பேசி
இரு ஆயுள் வாழ்ந்திருப்போம்!
இன்று
இருபது நொடிகூட போதும்
இந்த உயிர் அர்த்தப்படும்!

கண்ணை விட்டு நீரைப் போல்
சதையை விட்டு ரத்தம் போல்
உடலை விட்டு உயிரே போல்
உறவை உதறி சென்றாயே!

தேடித்தேடி உன்னையே
தொலைந்து நானும் போகிறேன்!
விட்டுசென்ற பெண்மையே
கலைந்து நானும் சாகிறேன்!!

மகிழ்வாய் ஒரு வாழ்க்கை செய்து
ஒற்றை கோப்பையில் நீ தந்தாய்!
பருகும்வரை பொறுமை இல்லையோ
பறித்துக்கொண்டு ஏன் சென்றாய்?!

பொதுவாய் சில நொடிகள்
மனதிலே புதைந்திருக்கும்!
புதைந்த அந்நொடிகள்
மனதை அரித்திருக்கும்!

விரல் வழி வழியும் கவிதைகள் எல்லாம்
காகிதம்கூட அறிகிறது!
விழி கொண்டு பார்த்தும் பெண்ணே
என் வலி(ரி) உனக்கு புரியலையா?!

காவி ஏற்க மனமில்லை - என்
காதலை ஏற்றிடு!
பாவி - தோற்க மனமில்லை
சாதலை நோற்கிறேன்!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!