வேடிக்கை பார்த்தவை!
இதுவரை என் வாழ்நாளில் நான் எழுதிய மிக நீண்ட கவிதை இது தான். 2017 - ஒரு பார்வை! வேடிக்கை பார்த்தவை! அம்மாவுடன் முடிந்து அழுக்குடனும் அதிரடியாகவும் ஆயிரம் அரசியலை சுமந்தவாறு விடிந்தது 2017! மாதம் ஒன்று: தமிழுக்கும் தமிழருக்குமாய் ஒரு போராட்டம்! இனி வருடந்தோறும் - எம் தெருக்களில் ஏரோட்டம்! இளைஞர் பெருங்கூட்டத்தால் மனத்தினில் களியாட்டம்! இளைஞர் மூட்டிய தீயணைக்க தீவிரவாதம் என்றோர் தீவைத்து தீர்த்தனர் மாபெரும் யுத்தத்தை ஆர்த்தனர் தீவிரவாத ரத்தத்தை! மாதம் இரண்டு: நாட்டின் உச்ச அரசியலும் எச்ச அரசியலும் - அதன் நர்த்தனம் துவங்கிய மாதம்! சின்னம்மா எழுச்சியும் அய்யாவின் தியானமும் சிறையிலே சென்று களித்ததும் பன்னீரும் ஸ்டாலினும் பார்த்து பேசி சிரித்ததும் இம்மாதமே! காவி வண்ணம் மெல்லமாய் காலை ஊன்றி நின்றதும் கால் இல்லாதவரெல்லாம் நாற்காலியை வென்றதும் இம்மாதமே! மாதம் மூன்று: சோறிட்ட எங்கப்பனும் மாரிலிட்டு பாலுட்டிய எங்கம்மையும் தெருவிலிட்டு அநாதையாய் அம்மணமாய் எலி கடித்து உருண்டிருந்தபோது, ஏசியிட்ட அறையில் கைகுலுக்கி புகைபடத்துக்கு முகம்காட்டி பல்லிளித்து பரிசளித்து முதல் பக்கவிளம்பரம் கொடுத்து மகிழ்ந...